Posts

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!

'வடக்கன்' என்று சொல்லி வடமாநிலத் தொழிலாளர்களைக் கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து, வடமாநிலத்தவர் மீதான ஏளனப் பிம்பத்தைக் கட்டமைத்து, அவர்கள் மீதான வெறுப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தூண்டி, அதன் மூலம் வருவாய் பார்த்தவர்களும், அதை ரசித்தவர்களும் இன்று சமூகம் சீர்கெட்டுவிட்டதாக அங்கலாய்த்து கொள்கிறார்கள்.  ஆம், சிறார்கள் செய்யும் எவ்விதக் குற்றங்களையும் நம்மால் நியாயப்படுத்த முடியாது, அப்படி நியாயப்படுத்துவதும் நியாயம் அல்ல! ஆனால் ஒரு நிமிடம் 'ஏன்?' என்று யோசித்தால் புரியும். சமூகம் என்பது ஏதோ வேற்றுக் கிரகவாசிகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல; இங்கு இருக்கும் நம் அனைவராலும்தான் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.  அரசு, அதிகாரிகள், குடும்பம், சுற்றம் ஆகியவற்றால் தான் இந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அந்தச் சிறார்கள் மட்டுமல்ல, நாமும்தான் குற்றவாளிகள்! சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட நாமும்தான் காரணம். இதைச் சிந்திக்காமல், 'வடசென்னை பசங்க', 'புள்ளிங்கோ' என்று அவர்கள் மீது வெறும் வெறுப்பை மட்டும் உமிழ்வது ஏற்புடையது அல்ல.  ஒருவரை அவரின் வ...

பெண்களாகிய நாங்கள்...

பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டனர். ராக்கெட் ஏறி விண்வெளிக்கே சென்று சாதனை படைத்துவிட்டனர். உள்நாட்டு விளையாட்டுகள் முதல் சர்வதேச விளையாட்டுகள் வரை கோப்பைகளை வாங்கிக் குவித்து வீராங்கனைகளாக வளம் வருகின்றனர் என்று மார்தட்டிக்கொள்ளும் சமுதாயத்தில், சுதந்திரமாகப் பெண்கள் வெளியே நடமாட ஏதுவான மற்றும் பாதுகாப்பானச் சூழல் உள்ளதா? எனப் பார்த்தால் இல்லை என்பதே உண்மை! பெண்களின் பாதுகாப்பு வீட்டிற்கு வெளியே தான் கேள்விக்குறியாக உள்ளது என்று பார்த்தால் வீட்டிற்குள்ளேயும் இப்படித்தான் உள்ளது. பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறி வந்தாலும் இச்சமூகம் பெண்களுக்கு ஏதுவானதாக இல்லை என்பதே உண்மை. குடும்ப பெண் இந்த நேரத்தில் வெளியே வருவாளா? என்ற கேள்வியின் ஊடாக ஒரு பெண்ணைத் தரநிர்ணயம் செய்பவர்களே! ஏன் பெண்கள் மட்டும் குடும்ப அமைப்பில் அணுக்கமாகவும் இணக்கமாகவும் இயங்க வேண்டும். குடும்ப ஆண்கள், மற்ற ஆண்களைப் பார்த்து உங்கள் கேள்விகளை ஒரு போதும் முன் வைப்பதில்லையே ஏன்? ஆண்களுக்குக் குடும்ப அமைப்பில் பங்கு இல்லையா? இரவு நேரங்களில் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆண்கள் குடும்ப ஆண்களா...
புத்தகக் காட்சி இலக்கியவாதிகள், வாசகர்கள், பொதுமக்கள் மத்தியில் மாபெரும் திருவிழாவாக நடந்த புத்தகக் காட்சியானது பொருட்செலவு மற்றும் ஆட்செலவில் நடந்து முடிந்தது. இந்தப் புத்தகக் காட்சி சுமார் 900 அரங்குகளை உள்ளடக்கியதாக இருந்தது.  இந்தப் புத்தகக் காட்சியிலும் எப்போதும்போல பல விமர்சனங்கள் நிலவி வந்தன. வழக்கத்துக்கு மாறாக, ஜனவரிக்கு முன்னரே, கண்காட்சியை நடத்தியதால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தாண்டி சாதி (தீண்டாமை) ரீதியான விமர்சனங்களும் எழுந்தது.  ஆனால் யாரும் அடிப்படை தேவையான கழிவறைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. கழிவறைகள் சுத்தமாகவே பராமரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சற்று பருமனானவர்கள் உள்ளே சென்று கதவைத் தாழிட்டு சிறுநீர் கழிக்க முடியாத நிலையில்தான் கட்டமைப்பு இருந்தது. குப்பைத்தொட்டிகளும் சரிவர இல்லாத காரணத்தால் நாப்கின்கள் அப்படியே கழிவறையிலே வீசப்பட்டது. இதையும் தவிர மாபெரும் உழைப்புச் சுரண்டலும் நடை பெற்றது.  வாரநாட்களில் 2 மணிக்குத் துவங்கும் புத்தகக் காட்சியில் இரவு 8:30க்கு அரங்குகள் மூடப்பட வேண்டும். ஆனால் அரங்குகள் மூட 9லிருந்து 9:30 வரை ஆகிவிடும். அரங்கு உரிமையாளரை...

நிரபராதிகள்

பாவம் என்ன தான் செய்வார்கள் மிராசுக்கள்  தங்கள் இரு கரங்களைக்கொண்டு  தீயிடவில்லை  பெண்களின் முலைகளைக் கசக்கவில்லை வன்புணரவில்லை  தீக்கரையிலிருந்து வீசிய குழந்தையை  மீண்டும் எரித்து சாம்பலாக்கவில்லை இரத்தம் சொட்ட சொட்ட தொழிலாளர்கள் புட்டத்தைக் கிழிக்கவில்லை  நெல்லுக்குப் பதில் பதரை அளிக்கவில்லை என்ன தான் செய்வான் மிராசு பாவம்! அவன் கையில் அதிகாரமில்லை, ஆட்சியில்லை  ஒடுக்கும் கரங்களில்லை! பாவம் அவர்கள் நிரபராதிகள் நேரடியாக குற்றம் புரியவில்லை இறந்தவர்கள் தங்கள் குடும்ப சண்டையில் இறந்தனர்கள் இறந்தது வெறும் 29 நபர்களே  இது தான் உண்மை  இது தான் சத்தியம்  மிராசுக்கள் குற்றமற்றவர்களே! நிரபராதிகளே!

ஒரு இன்ச் !

 கல்யாணமாகி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. இன்னும் எங்களுக்கு குழந்தை பேறு கிட்டவில்லை. ஏதோ குற்றவாளிகளை போல உணர்கிறோம். இதனா‌ல்  மிகுந்த  மன உளைச்சல் இருவருக்கும். சமீபத்தில் அவர் டைரியின் வாயிலாக, அவரது அவஸ்தைகள் தெரிந்தன. அவர் இதுவரை அதை வெளிக்காட்டவில்லை.  அவர் வேலை நிமித்தமாக, அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். வெகுநாட்களுக்குப் பிறகு,  இன்று எப்படியாவது கட்டிலுக்குச் செல்ல வேண்டும் என அவர் வருவதற்குள் தயாராகி இருந்தேன். எனக்கு வாசனை திரவியங்கள் மீதும் வாசனை பொருட்கள் மீதும் விருப்பம் அதிகம். அவருக்குப் பிடித்த இளம்பச்சை காட்டன் சுடிதாரை அணிந்து காத்திருந்தேன். வந்தார். ஒன்றாகச் சேர்ந்தமர்ந்து உணவருந்திவிட்டு, எப்போதும் போல தூங்கச் சென்றோம். கட்டிலில் அமர்ந்து அவரைப் பார்த்தபடி அவரது கைகளைப் பற்றிக் கொண்டேன். "ஓய் என்ன இது ?" சற்று அசட்டு கோபத்தோடு  "என்ன எது ?" என்றேன். சிரித்துக்கொண்டே அருகில் வந்தார். என்னை கண்கொட்டாமல் பார்த்தவாறே இருந்தார். நான் அவரைப் பார்த்தபடி இருந்தேன். இறுக்கி அனைத்துக்கொண்டார். "ஓய் !"என்றார். நான் அமைதியாக ஆழ்ந்த மௌனத்து...

முதல் மரணம்

 வாழ்க்கையில் என்னை பெரிதும் பாதித்த முதல் மரணம் என்னுடைய அப்பாவின் மரணம்தான். வீடே ஒரு மாதிரியான அமைதியில் உறைந்திருக்க, மௌனத்தின் பேரிரைச்சல் மட்டும் சூழ்ந்திருந்தது. காலை ஒரு பதினோரு மணி அளவில், எனக்கு மட்டும் அந்த செய்தி தெரிய வந்தது. "அவர் இறந்துவிட்டார்"   ம்... அப்பா இறந்துவிட்டார். பதினைந்து வயதில், எப்படி அதைக் கையாளுவது, அணுகுவது என எதுவும் புரியாமல் தவித்து நின்றேன் தனியாக. பிறகு கொஞ்சம் நேரத்தில் எல்லாச் சொந்தமும் கூடிவிட்டது சரியாக 1:40 மணிக்கு. அவர் இறந்துவிட்டார் என எல்லார்க்கும் தெரியவந்தது. எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லப்பட்ட செய்தி, எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. மழை கொட்டி தீர்த்தது. அப்பாவின் உடலை ஐந்து  மணிக்கு எடுத்து வருவதாகச் சொன்னார்கள். இரண்டு நாட்களாக எதுவும் சரியாக சாப்பிடாத சித்தப்பா அழுதுகொண்டே உட்கார்ந்து இருந்தார். தங்கைகளுக்கும் , அம்மாவிற்கும் எந்த ஆறுதலை கூறி ஆசுவாசப்படுத்துவதென்று தெரியாது நான் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவின் உடல் வந்தது. நேராக பூஜை அறையில் படுத்திருந்தார். உட...

ஹைக்கூ

 ஓவியம் --------------- துருப்பிடித்த தூரிகையில் கறைபடிந்த கைகளில் ஒரு வண்ண ஓவியம்! சாரல் மழை  --------------------- பல கனவுகளை  சுமந்து செல்கிறது  தூரத்து சாரல் மழை! அட்சதைகள் ----------------------- அக்கா அலம்பி வைத்த பாத்திரங்களுக்கு அட்சதை தூவி கொண்டிருக்கிறது எங்கள் வீட்டு வேப்பமரம்! தூசி -------- தொட தொட  ஒட்டி கொள்கிறது தூசி !