நிரபராதிகள்

பாவம் என்ன தான் செய்வார்கள் மிராசுக்கள் 

தங்கள் இரு கரங்களைக்கொண்டு 

தீயிடவில்லை 

பெண்களின் முலைகளைக் கசக்கவில்லை

வன்புணரவில்லை 

தீக்கரையிலிருந்து வீசிய குழந்தையை 

மீண்டும் எரித்து சாம்பலாக்கவில்லை

இரத்தம் சொட்ட சொட்ட தொழிலாளர்கள் புட்டத்தைக் கிழிக்கவில்லை 

நெல்லுக்குப் பதில் பதரை அளிக்கவில்லை


என்ன தான் செய்வான் மிராசு பாவம்!

அவன் கையில் அதிகாரமில்லை, ஆட்சியில்லை 

ஒடுக்கும் கரங்களில்லை!


பாவம் அவர்கள் நிரபராதிகள்

நேரடியாக குற்றம் புரியவில்லை

இறந்தவர்கள் தங்கள் குடும்ப சண்டையில் இறந்தனர்கள்

இறந்தது வெறும் 29 நபர்களே 

இது தான் உண்மை 

இது தான் சத்தியம் 

மிராசுக்கள் குற்றமற்றவர்களே!

நிரபராதிகளே!


Comments

  1. இன்றளவும் எதுவும் மாறவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ம்...மாற்றுவோம்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!