ஒரு இன்ச் !
கல்யாணமாகி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. இன்னும் எங்களுக்கு குழந்தை பேறு கிட்டவில்லை. ஏதோ குற்றவாளிகளை போல உணர்கிறோம். இதனால் மிகுந்த மன உளைச்சல் இருவருக்கும். சமீபத்தில் அவர் டைரியின் வாயிலாக, அவரது அவஸ்தைகள் தெரிந்தன. அவர் இதுவரை அதை வெளிக்காட்டவில்லை.
அவர் வேலை நிமித்தமாக, அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். வெகுநாட்களுக்குப் பிறகு, இன்று எப்படியாவது கட்டிலுக்குச் செல்ல வேண்டும் என அவர் வருவதற்குள் தயாராகி இருந்தேன். எனக்கு வாசனை திரவியங்கள் மீதும் வாசனை பொருட்கள் மீதும் விருப்பம் அதிகம். அவருக்குப் பிடித்த இளம்பச்சை காட்டன் சுடிதாரை அணிந்து காத்திருந்தேன்.
வந்தார். ஒன்றாகச் சேர்ந்தமர்ந்து உணவருந்திவிட்டு, எப்போதும் போல தூங்கச் சென்றோம். கட்டிலில் அமர்ந்து அவரைப் பார்த்தபடி அவரது கைகளைப் பற்றிக் கொண்டேன்.
"ஓய் என்ன இது ?"
சற்று அசட்டு கோபத்தோடு "என்ன எது ?" என்றேன்.
சிரித்துக்கொண்டே அருகில் வந்தார். என்னை கண்கொட்டாமல் பார்த்தவாறே இருந்தார். நான் அவரைப் பார்த்தபடி இருந்தேன். இறுக்கி அனைத்துக்கொண்டார். "ஓய் !"என்றார். நான் அமைதியாக ஆழ்ந்த மௌனத்துடன் இருந்தேன். கழுத்தில் முத்தமிட்டுவிட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு வந்தார். இதழ்களை பறிமாறிக்கொண்டிருந்தோம். திடீரென அடி வயிற்றில் இருபுறமும் கடுமையான வலி. திரும்பவும் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தார். மார்பகமும் மார்பு காம்புகளும் வலிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது இதழ்களை நனைத்துக்கொண்டே மென்மையாக மார்புகளை பற்றிக்கொண்டார். இது சற்று இதமாக இருந்தது. பெண்ணுறுப்பு கிழிந்து விரிந்துவிடுவது போல ஒரு உணர்வு. கடுமையானவலி.
"ஒரு நிமிஷம்" என்று லைட்டை போட்டேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியாக இருந்தார். நான் அவசரமாக, கழிவறை கதவைத் திறந்து உள்ளே சென்றேன். அவரும் பதறிப் பின்னாடியே வந்தார். ஒரு இன்ச் சதையும் சில துளி இரத்தமும் தரையிலிருந்தன.
Comments
Post a Comment