ஹைக்கூ
ஓவியம்
---------------
துருப்பிடித்த தூரிகையில்
கறைபடிந்த கைகளில்
ஒரு வண்ண ஓவியம்!
சாரல் மழை
---------------------
பல கனவுகளை
சுமந்து செல்கிறது
தூரத்து சாரல் மழை!
அட்சதைகள்
-----------------------
அக்கா அலம்பி வைத்த பாத்திரங்களுக்கு
அட்சதை தூவி கொண்டிருக்கிறது
எங்கள் வீட்டு வேப்பமரம்!
தூசி
--------
தொட தொட
ஒட்டி கொள்கிறது
தூசி !
👌👌
ReplyDelete