மங்கை

 திண்ணைக்கு அருகில் அமர்ந்து  மங்கை குப்பை கீரைகளை கிள்ளிக் கொண்டு இருக்கிறாள்,வெளியே சென்ற கணவன் கொல்லைப்புறம் சென்று கை , கால்களை கழுவி விட்டு உள் நுழைகிறார்."என்னங்க போன வேலை எப்படி" ,"எல்லாம் நல்ல செய்தி தான்டி வேலை கிடைத்தது"."சரி குழந்தைகள் எங்கே ?". "அவங்க விளையாடிட்டு இருந்தாங்க வருவாங்க". குழந்தைகள் இருவரும் வந்தனர் . "வெயில் காலம் முடிந்தது அடுத்த மழை காலம் நாம் குடிசை தாங்குமாங்க" "ம்ம் இரு நாளை பின் புறம் உள்ள ஓலைகளைக்கொண்டு வெய்து கொள்வோம்" .கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது திடீரென , இவள் சமைப்பதற்கு உள்ளே செல்கிறாள் மேகத்தைபார்த்து ,தீ பற்றுவதற்குள் மழை பெய்ய தொடங்கியது இவள் பெரும்பாடு பட்டு கொண்டு இருக்கிறாள் .சல்லடை போல ஒழுகி கொண்டு இருக்கிறது,அப்போது நம்பிக்கை தரும் விதமாக தீ பற்றி சுள்ளிகள் எரிகிறது. "என்னங்க அந்த ஓரத்தில் இருக்க குடையை எடுங்க ரொம்ப ஓரம் போகாதீங்க ஒரு குட்டி எலி வலை இருக்கு" ,அந்த குடையிலும் அரையணா அளவு ஓட்டை உள்ளது .ஒரு வழியாக சமைத்து முடித்தாள் ."என்னங்க சாப்பிடனும்","ம் ஒரே பாத்திரத்தில் எல்லோருக்கும் சாதத்தை போடு உருட்டி சாப்பிடுவோம்" . சாப்பிட்டு முடித்து விட்டனர் , வீட்டில் இருவர் உறங்கும் அளவிற்கு மட்டுமே இடம் இருந்தது அங்கு கயிற்று கட்டிலில் கயல் அவள் அப்பா மேல் உறங்க, மங்கை மேல் சங்கர் படுத்து கொண்டான்..


Comments

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!