அப்பா
கார் இருளில் ..!
கண்கள் காரணமின்றி,
வழிய தொடங்கியது ...!
மனம் மயலிட்டது ..!
உன்னை ...!
ஊரறிய உனக்காக
ஒரு துளி கண்ணீர் கசிந்தது இல்லை ..!
நான் சிந்தும் கண்ணீரை
ஊரறியேன்...!
உன் மடி மெத்தை மறந்தது ..!
உன் குரல் காற்றோடு..
கரைந்து கலந்து போனது..!
வீட்டிற்கு வருகிறேன் என்றாய்..
வரவில்லை இன்றும்..!!
வருகையை வாசலோடு ..
எதிர் நோக்கினேன்..!
வந்தாய் வெண்ணிற ஆடையில்...!!
பிரேதம் என்ற புது பெயரோடு...!!
அந்த நொடி கல்லாய் போனேன்...!!
ஓர் இரவு தனிமையில்...
உன் வருடலை நன்கு உணர்ந்தேன்...!!
சத்தம் போட்டால் மறைந்துவிடுவாய் என..
மௌனம் காத்தேன்...!
வெளியில் சொன்னால்
பொய்யாகி விடுவாய் என சொல்லவில்லை....
யாரிடமும் இன்றும்...!!
வீட்டிற்கு வர வழி மறந்தாயோ...?
காணா தேசம் சென்றாயோ...??
சில நேரம் உன் குரல் பித்து கொண்டு ...
ஏமாற்றத்தோடு திரும்புவேன்...!!
காய்ச்சலோடு கட்டிலில் இருந்தேன்...
வருவாய் என...!!
வரவில்லை ...!!
காய்ச்சலை காணவில்லை..!!!
உன் உதிரத்தில் உதிர்த்தவள்..!!
அழைக்கிறேன் வருவாயா..??
உறக்கத்தை விடுத்து உட்கார்ந்துள்ளேன்...!
Don't feel dr. Daddy's z always wid u d ma... well penned... extraordinary Banu...
ReplyDelete♥️
ReplyDelete😍❤️❤️❤️❤️❤️❤️
Delete🥺❤️
ReplyDeleteDon't feel priya
ReplyDeleteAppa is always with you
ஒனக்குள் என்னை ஓணர்வை
உன் தந்தை.
😓💟
ReplyDelete😓💟
ReplyDelete♥️🖤
ReplyDelete