அவள்
Aug 31,
கல்லூரி வாசலில் இடப்பக்கம் உள்ள டீக்கடையில் எப்போதும் போல ஒரு சிகரெட்டை வாங்கினேன் , இப்போது எனக்கு ஏனோ சிகரெட்டை புகைக்க விருப்பமில்லை , இருப்பினும் திரும்பி நின்று புகைத்து கொண்டு இருந்தேன்.எப்போழுதும் நண்பர்களோடு மாலை நேரத்தில் இங்கு வருவது வழக்கம் இன்று நான் மட்டும் முன்னதாகவே தனியாக வந்துவிட்டேன் ஏதோ ஒரு உள்ளுணர்வால் கல்லூரி வாசலை பார்க்க ஆரம்பித்தேன்.மதிய நேரமாக இருப்பதால் அனைவரும் வகுப்புகளை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர் ,அதில் பெண்களும் சிலர் சென்று கொண்டு இருந்தனர் அந்த கூட்டத்தில் நீண்ட சடை உள்ள பெண்களை கண்கள் தேடியது .எனக்கு நீண்ட சடை உள்ள பெண்கள் மீது ஒரு வித மயக்கம் .வெளிர் நீல சுடிதார் அணிந்த பெண்ணின் கூந்தல் அவள் தொடை வரை நீண்டு இருந்தது அதை பார்த்து நான் இரசித்து கொண்டு இருந்தேன் ,சற்றென அவள் கையில் இருந்த புத்தகத்தில் இருந்து ஒரு காகிதம் விழுந்தது ,இங்கிருந்து பார்த்தவுடன் ஓடி சென்று கையில் எடுத்து பிரித்து பார்த்தேன் அதில் சிலப்பதிகாரத்தில்,புகார்காண்டத்தில் உள்ள வழக்குரை காதை பற்றிய குறிப்புகள் எழுத பட்டு இருந்தது, முடிவில் சி.வாசுகி ,முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு என எழுதபட்டு இருந்தது.எனக்கு மிகுந்த வியப்பு ,இவ்வளவு நாட்கள் இருவரும் ஒரே வகுப்பில் தான் இருந்து இருக்கிறோம் ஆனால் நான் அவளை பார்த்தது இல்லை இதுவரை ,நான் வகுப்புகளுக்கு பெரும்பாலும் செல்ல மாட்டேன் கல்லூரியில் நூலகம் ,மரத்தடியிலே பெரும்பாலும் நாட்களை கழிப்பேன்.மேலும் வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும் இளங்கலை தமிழும் இங்கு தான் முடித்தேன் அதனால் யாரும் பெரியதாக எதுவும் கேட்டு கொள்ள மாட்டார்கள்
"என்னங்க!...
உங்களதான் "
"நானா ?"
"ம்...நீங்க தான் ..
இந்த பேப்பர் உங்க புக் ல இருந்து விழுந்துச்சி "
" தாங்க்ஸ்"
என்று சொல்லி விட்டு சற்றென்று மறைந்தாள் ஒரு உணர்வை தூண்டி விட்டு.அன்று அவள் கண்களில் விழுந்தவன் .
Comments
Post a Comment