மரப்பாச்சி

தேர் திருவிழா நடைப்பெற்று கொண்டு இருந்தது, ஊர் எங்கும் ஒரே கொண்டாட்டம். வெளியூருக்கு வேலை நிமித்தமாக சென்று இருந்த அப்பா திருவிழாவிற்கு வந்து இருந்தார். நான் ஏழு வயது சிறுமி. அப்பாவை கண்ட உடன் மூச்சிரைக்க ஓடி வந்து அவர் கால்களை பற்றி கொண்டு அவர் கம்பீரமான முகத்தை  நிமிர்ந்து பார்த்தேன். அவர் என்னை உடனே தூக்கி கொண்டார். பின்பு மதிய உணவை உண்டு விட்டு இரவு திருவிழாவிற்கு சென்றோம். நான் பஞ்சுமிட்டாய், கடலை உருண்டை, கண்ணாடி வளையல் போன்றவற்றை வாங்கி கொண்டேன். அப்பா ஒரு பொம்மை கடைக்கு அருகில் தூக்கி சென்று ஒரு மரப்பாச்சி பொம்மையை கையில் வாங்கி கொடுத்தார். அவர் தோள்மீதே தூங்கி விட்டேன் போலும். திருவிழா முடிந்தது. அப்பாவும் சென்றுவிட்டார். அன்று அவளுக்கு தெரியவில்லை. அவர் சென்றபிறகு மீண்டும் திரும்பி வரமாட்டார் என்று. அவள் பதினைந்து வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த மரப்பாச்சி பொம்மையுடன் சிறுபிள்ளையாக ...

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!