Posts

Showing posts from December, 2020

புது வருஷம்

எப்போதும் போல இன்றும் கல்லூரி முடிந்தவுடன் மரத்தடியில் உட்கார்ந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன் . இந்த மரத்தடி என்னை எப்போதும் அரவணைத்து ,ஆசுவாசப்படுத்துகிறது ஒரு நாள் தவறாமல் தினமும் வருவது வழக்கம் . ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ,பத்து நிமிடத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன் . எப்பவும் போல இன்றும் நிறைய கூட்டம்தான் , அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து ஐரா படத்து "மேகதூதம்"பாடலை கேட்டுகொண்டே , கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன் ஒரு மூன்றடி தூரத்தில் ஒரு காதல் ஜோடி நின்றுகொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கு அந்த பையன் அந்த பொண்ணிடம் ரொம்ப நேரமாக கெஞ்சிகொண்டிருந்தான் . இரண்டு இருக்கைக்கு அப்பால் ஒரு கர்ப்பிணி உட்கார்ந்துகொண்டு இருந்தாள். அடுத்ததாக புதுப்பேட்டை படத்தில் இருந்து "ஒரு நாளில் வாழ்க்கை" பாட்டு காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. தூரத்தில் இருந்த   நாய் ஒன்று  நான்கு குட்டிகளோடு ஒடுகிறது .இந்த கூட்டத்திலும் இத்தனை வாகனங்களுக்கு மத்தியிலும் ,மணி ஆறை தாண்டி, ஏழாக போகிறது ...