வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!
'வடக்கன்' என்று சொல்லி வடமாநிலத் தொழிலாளர்களைக் கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து, வடமாநிலத்தவர் மீதான ஏளனப் பிம்பத்தைக் கட்டமைத்து, அவர்கள் மீதான வெறுப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தூண்டி, அதன் மூலம் வருவாய் பார்த்தவர்களும், அதை ரசித்தவர்களும் இன்று சமூகம் சீர்கெட்டுவிட்டதாக அங்கலாய்த்து கொள்கிறார்கள். ஆம், சிறார்கள் செய்யும் எவ்விதக் குற்றங்களையும் நம்மால் நியாயப்படுத்த முடியாது, அப்படி நியாயப்படுத்துவதும் நியாயம் அல்ல! ஆனால் ஒரு நிமிடம் 'ஏன்?' என்று யோசித்தால் புரியும். சமூகம் என்பது ஏதோ வேற்றுக் கிரகவாசிகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல; இங்கு இருக்கும் நம் அனைவராலும்தான் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு, அதிகாரிகள், குடும்பம், சுற்றம் ஆகியவற்றால் தான் இந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அந்தச் சிறார்கள் மட்டுமல்ல, நாமும்தான் குற்றவாளிகள்! சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட நாமும்தான் காரணம். இதைச் சிந்திக்காமல், 'வடசென்னை பசங்க', 'புள்ளிங்கோ' என்று அவர்கள் மீது வெறும் வெறுப்பை மட்டும் உமிழ்வது ஏற்புடையது அல்ல. ஒருவரை அவரின் வ...