முதல் மரணம்
வாழ்க்கையில் என்னை பெரிதும் பாதித்த முதல் மரணம் என்னுடைய அப்பாவின் மரணம்தான். வீடே ஒரு மாதிரியான அமைதியில் உறைந்திருக்க, மௌனத்தின் பேரிரைச்சல் மட்டும் சூழ்ந்திருந்தது. காலை ஒரு பதினோரு மணி அளவில், எனக்கு மட்டும் அந்த செய்தி தெரிய வந்தது. "அவர் இறந்துவிட்டார்" ம்... அப்பா இறந்துவிட்டார். பதினைந்து வயதில், எப்படி அதைக் கையாளுவது, அணுகுவது என எதுவும் புரியாமல் தவித்து நின்றேன் தனியாக. பிறகு கொஞ்சம் நேரத்தில் எல்லாச் சொந்தமும் கூடிவிட்டது சரியாக 1:40 மணிக்கு. அவர் இறந்துவிட்டார் என எல்லார்க்கும் தெரியவந்தது. எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லப்பட்ட செய்தி, எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. மழை கொட்டி தீர்த்தது. அப்பாவின் உடலை ஐந்து மணிக்கு எடுத்து வருவதாகச் சொன்னார்கள். இரண்டு நாட்களாக எதுவும் சரியாக சாப்பிடாத சித்தப்பா அழுதுகொண்டே உட்கார்ந்து இருந்தார். தங்கைகளுக்கும் , அம்மாவிற்கும் எந்த ஆறுதலை கூறி ஆசுவாசப்படுத்துவதென்று தெரியாது நான் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவின் உடல் வந்தது. நேராக பூஜை அறையில் படுத்திருந்தார். உட...